கொழும்பில் ஐ.தே.க. பாரிய ஆர்ப்பாட்டம் – பல வீதிகள் முடக்கம்!

கொழும்பில் ஐ.தே.க. பாரிய ஆர்ப்பாட்டம் – பல வீதிகள் முடக்கம்!

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்றை முன்னெடுத்துள்ளது.

தற்போதைய அரசாங்கத்திற்கு பெரும்பான்மை இல்லையென தெரிவித்தும், அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி செயற்படுவதாக குற்றஞ்சாட்டியும் குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டம், பேரணியாக செல்வதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதனால் பல வீதிகளின் வாகன போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net