நாங்கள் செய்து காட்டுவோம்: மகிந்த சவால்!
நாடாளுமன்ற அமர்வு நேற்றைய தினம் ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை பத்து மணியளவில் அமர்வானது பெரும் அமளி துமளிக்கு மத்தியில் ஆரம்பமாகியிருந்தது.
இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச விசேட உரையாற்றியிருந்தார்.
தனது உரையின் போது அவர், உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்தாலும் விலை சூத்திரத்தின் அடிப்படையில் விலையை கூட்டிக் கொண்டே சென்றார்கள்.
நாம் வந்த பின்னர் எரிபொருள் சூத்திரத்தை ரத்து செய்வதாக கூறினோம். அத்துடன், எரிபொருள் விலையையும் குறைத்தோம்.
இன்றும் எரிபொருள் விலையை குறைப்போம். நீங்கள் அதிகரித்த எரிபொருள் விலையை இன்று நாங்கள் குறைக்கிறோம் என தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினர் கூச்சலிட்ட நிலையில், நாம் செய்து காட்டுவோம் என அவர் சபையில் வைத்து பகிரங்க சவால் விடுத்திருந்தார்.