நாடாளுமன்றில் மோதலைத் தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!
நாடாளுமன்றம் எதிர்வரும் 21ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பினருக்கு மத்தியில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து, அடுத்த கட்ட செயற்பாடுகள் தொடர்பாக கட்சித் தலைவர்களுடன் சபாநாயகர் கரு ஜயசூரிய விசேட சந்திப்பொன்றை நடத்தினார்.
அதன் பின்னர் எதிர்வரும் 21ஆம் திகதிவரை நாடாளுமன்றை ஒத்திவைப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இரு தரப்பிற்கும் இடையில் அமளி துமளி ஏற்பட்ட சந்தர்ப்பத்தில், அக்ராசனத்தை நோக்கி சில பொருட்கள் வீசப்பட்டதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து வெளியேறிய சபாநாயகர் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டத்தினை ஏற்பாடு செய்து, சபை அமர்வை ஒத்திவைப்பது தொடர்பாக தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.