அரசாங்கத்திற்கு எதிராக ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக ஐ.தே.க. ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்தின் செயற்பாடுகள் அரசியலமைப்பிற்கு முரணானதென தெரிவித்து, ஐக்கிய தேசியக் கட்சி கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை கண்டிப்பதோடு, ஜனநாயகத்தை மீள கட்டியெழுப்பும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் ஜனநாயகத்தை விரும்பும் சகல தரப்பினரையும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் வர்த்தமானி அறிவித்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனை சிறப்பிக்கும் முகமாகவும் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெறுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று முன்தினம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 3755 Mukadu · All rights reserved · designed by Speed IT net