நாடாளுமன்றில் கடும் அமளிதுமளி! சபாநாயகர் ஆசனத்தை சூழ்ந்து குழப்பம்!
நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களுக்கு இடையில் கடும் அமளி துமளி ஏற்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட உரை இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
இதன்போது இரு தரப்பிற்கும் இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்று, இறுதியில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளதாக எமது நாடாளுமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.