அரச ஊழியர்களுக்கு சம்பளம் பறிபோகும் அபாயம்?
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தும் இவ்வாறு நெருக்கடி நிலைமையினால் இழுத்தடிப்புக்கு உள்ளாகுமானால், ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
இந்த நிலைமை தொடர்ந்தும் இடம்பெற்றால், வரவு செலவுத் திட்டமொன்றையும் முன்னெடுக்க முடியாமல் போகும்.
நாட்டில் வரவு செலவுத் திட்டமொன்றை முன்வைக்காமல் செலவு செய்வது எப்படி ? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இந்த நிலைமையினால் அரச ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதும் பிரச்சினைக்குரியதாக மாறும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.