ஜனாதிபதியின் அறிவிப்பை புறக்கணித்து சபாநாயகர் செய்த காரியம்!
நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற குழப்ப நிலைக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய பொறுப்பேற்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குழு அறையில் நேற்றைய தினம் நடத்தப்பட்ட ஊடகவியலளார் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே இநத் விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதாக கூறப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை தான் ஏற்றுக் கொள்ளவில்லையென ஜனாதிபதி, சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.
எனினும் இந்த அறிவிப்பை சபாநாயகர் சபையில் அறிவிக்காது, ஐ.தே.கவின் நிகழ்ச்சி நிரலுக்கு அமைய செயற்பட்டுள்ளார்.
பிரதமர் நியமிப்பு மற்றும் பிரதமர், அமைச்சரவை என்பவற்றை அகற்றும் அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை.
எனவே நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பகரமான செயற்பாடுகளுக்கு சபாநாயகரே பொறுப்பேற்றக வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.