தலவாக்கலையில் தீ விபத்து: 2 கடைகள் முற்றாக எரிந்து நாசம்!
நுவரெலியா – தலவாக்கலை, பிரதான நகரில் உள்ள வியாபார நிலையங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் 2 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் ஆகியன தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தலவாக்கலை லிந்துலை நகர சபையினரின் தீயணைப்பு பிரிவினருடன் பிரதேச மக்களும், தலவாக்கலை பொலிஸாரும் இணைந்து இத்தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.
அப்பகுதி மக்களுக்கு எவ்வித சேதங்களும் ஏற்படவில்லை என்பதுடன் தீ விபத்து காரணம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.