நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைப்பு!

நாடாளுமன்ற அமர்வுகள் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இன்று (வெள்ளிக்கிழமை) நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தை தொடர்ந்து நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நேற்று முன்தினம் நாடாளுமன்றம் கூட்டப்பட்டது.

ஆனால், அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை தொடர்ந்து நாடாளுமன்ற அமர்வுகள் நேற்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, நேற்றைய நாடாளுமன்ற அமர்வுகளின்போதும் குழப்பம் நீடிக்க நாடாளுமன்றத்தை எதிர்வரும் 21ஆம் திகதிவரை ஒத்திவைப்பது என தீர்மானிக்கப்பட்டது.

ஆனால், அதனை தொடர்ந்து இடம்பெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தையடுத்து இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவது என தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி இன்றைய நாடாளுமன்ற அமர்வுகள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னதாகவே சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

இதனையடுத்து நாடாளுமன்றம் எதிர்வரும் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net