நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் அவதானித்துள்ளது!
நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் இன்று அவதானித்துள்ளதென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்பநிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்றைய தினம் இடம்பெற்ற குழப்ப நிலையைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முன்னோக்கிச் செல்வது கடினமாக சூழல்.
இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவத்தை முழு உலகமும் அவதானித்துள்ளது. அத்துடன் நாடாளுமன்றில் பெரும்பான்மை யார் பக்கம் உள்ளது என்பது தற்போது புலனாகியுள்ளது“ என தெரிவித்துள்ளார்.