நாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது!

நாட்டில் இடம்பெற்றுவரும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது!

ஜனநாயக நாடு என்ற வகையிலே தற்போது நாட்டில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் அராஜக முறையை அனுமதிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று(வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் பின்னர் ஆதவன் செய்திப் பிரிவுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையிலே ஐக்கிய தேசிய முன்னணி 5 வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும். ஆகவே இந்த ஆட்சி 2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரை தொடரும்.

தற்போது சர்வாதிகாரப் போக்குடன் மக்களுக்கு விரோதமான இயங்குவதற்கு ஒரு குழு தயாராகிக் கொண்டிருக்கின்றது.

இதிலே பார்க்கவேண்டிய விடயம் என்னவென்றால் எந்த ஜனாதிபதிக்கு மக்கள் ஆணை வழங்கினார்களோ அவரே இப்போது ஜனநாயக விரோத செயற்பாடுகளில் ஈடுபடுவதை பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இதுவொரு துரதிஷ்டவசமான நிலைமை.

எனவே ஜனநாயக விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். நாட்டின் இறைமை பாதுகாக்கப்படவேண்டும்.

அதனால் நாம் மீண்டும் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றோம். அதிலே வெல்வோம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது” என்று தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net