நாட்டில் ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும்!
இலங்கையில் தற்போது இருக்கும் அரசியல் நெருக்கடி நிலையை தீர்த்து ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் சீனா நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த நாட்களாக இலங்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி நிலைமை தொடர்பில் சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சூனியிங் நேற்று(வியாழக்கிழமை) கருத்து வெளியிட்டுள்ளார்.
அதில், “இலங்கையின் பாரம்பரிய அயல் நாடு என்ற அடிப்படையில் இலங்கையில் நிகழும் விடயங்களை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.
நாங்கள் இலங்கையால் ஸ்திரத்தன்மையை நிலை நாட்ட முடியும், தற்போதைய நெருக்கடிக்கு தீர்வை காணமுடியும் என நம்புகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.