நாட்டை பாதுகாக்க பொலிஸாருக்கு ஜனாதிபதி உத்தரவு!

நாட்டை பாதுகாக்க பொலிஸாருக்கு ஜனாதிபதி உத்தரவு!

நாட்டில் நிலவியுள்ள அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் வன்முறைகள் வெடிக்காத வண்ணம் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்கும் வகையில் நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ் திணைக்களத்திற்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கு அமைவாக தலைநகர் கொழும்பில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முப்பது அமைச்சுக்களுக்கும் பாதுகாப்பு வழங்குவதற்காக விஷேட அதிரடிப்படை மற்றும் பொலிஸ் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும் , அலரி மாளிகை , ஜனாதிபதி செயலகம் , பாராளுமன்றத் தொகுதி உள்ளிட்ட முக்கிய பகுதிகளிலும் சிறப்பு பாதுகாப்பு நடவக்கைகள் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைய முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net