போர்க்களமாக மாறிப்போன நாடாளுமன்றம்! ஜெர்மன் தூதுவர் கவலை!

போர்க்களமாக மாறிப்போன நாடாளுமன்றம்! ஜெர்மன் தூதுவர் வெளியிட்டுள்ள கவலை!

இலங்கையில் ஜனநாயகத்திற்கு மிகமோசமான நாள் என ஜெர்மனியின் இலங்கைக்கான தூதுவர் Jörn Rohde தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்யே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கையின் ஜனநாயகத்திற்கு மிக மோசமான நாள் என குறிப்பிட்டுள்ள அவர் இலங்கைக்கு என நீண்ட கால ஜனநாயக பாரம்பரியம் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சபாநாயகர் மீது பொருட்களை வீசுவதும் வாக்களிப்பை தடுப்பதும் ஜனநாயக நாடொன்றிற்கு பொருத்தமான நடவடிக்கையில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net