மஹிந்தவை பிரதமராக நியமித்தமை வரவேற்கத்தக்கது!

மஹிந்தவை பிரதமராக நியமித்தமை வரவேற்கத்தக்கது -இலங்கைக்கான உலக மையம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளமை வரவேற்கத்தக்கது.

தேசிய அரசாங்கம் கடந்த மூன்று வருடகாலமாக நாட்டுக்காக செயற்படாமல் மேற்குலக நாடுகளின் தேவைகளுக்கு மாத்திமே செயற்பட்டது என இலங்கைக்கான உலக மையம் குறிப்பிட்டுள்ளது.

உலக மையத்தின் இலங்கைக்கான செயற்பாட்டாளர் பேராசிரியர் ஜகத் சந்ரவசம் குறிப்பிடுகையில்.

அடுத்த வருடம் நாடு சர்வதேசத்தில் எதிர்கொள்ளவிருந்த பாதக விளைவுகளை தடுக்கவே ஜனாதிபதி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் இரு தரப்பினருக்குமிடையில் மாறுப்பட்ட தர்க்கங்கள் காணப்பட்டாலும் இதற்கான அவசியத்தினை புரிந்துக் கொள்ள வேண்டும்.

அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டிருக்கும் பட்சத்தில் அரசியல்வாதிகள் தமது தேவைகளை தக்கவைத்துக் கொள்ள செயற்படாமல் ஜனநாயகத்தினை பாதுகாக்க முன்வரவேண்டும்.

ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியமைக்கான காரணத்தை மக்களுக்கு குறிப்பிட்டதன் பின்னணியில் பல விடயங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்குலக நாடுகளுக்கான பிரதிநிதியாகவே செயற்பட்டுள்ளார் என்பதை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து சர்வதேசங்கள் அடைந்த அதிருப்தியினூடாக தெரிந்துக் கொள்ளலாம்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net