மூன்றாவது தடவையாக வாக்கெடுப்பில் மஹிந்த தோல்வி!

மூன்றாவது தடவையாக வாக்கெடுப்பில் மஹிந்த தோல்வி!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்றுடன் மூன்றாவது தடவையாக நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார் என ஹர்ஷ டீ சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றம் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாவதற்கு முன்னதாக மஹிந்த ஆதரவு அணியினர் சபாநாயகர் ஆசனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியிருந்தனர்.

இதன் போது நேற்றைய அமர்வின் போது கத்தி முயற்சி செய்த பாலித தேவப்பெரும மற்றும் ரஞ்சன் ராமநாயக்கவை கைது செய்யுமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

இருப்பினும் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பினர், மக்கள் விடுதலை முன்னணியினர் தமது ஆசனத்தில் அமர்ந்திருந்தனர்.

தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததுடன் சில அசம்பாவித சம்பவங்களும் நாடாளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது தடவையாக நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார் என கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net