கொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார்!

கொலை வெறித்தாக்குதலை ஊக்குவிக்க மஹிந்த அவசரமாக ஹெலிகொப்டரில் வந்திறங்கினார்!

பாராளுமன்றில் இன்று மஹிந்த ராஜபக்ஷவின் கொலைவெறி கொண்ட குழுவினர் அராஜகமாக நடந்துகொண்டதை, மேலும் ஊக்குவிப்பதற்காக மஹிந்த ராஜபக்ஷ அவசரமாக பாராளுமன்றுக்கு ஹெலிகொப்டரில் வந்திறங்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.

சாதாரண தரப் பரீட்சையில் கூட தோற்றாத படிப்பறிவற்ற மீன் வியாபாரம், குடு, கசிப்பு விற்பனை செய்த சிலரே இன்று பாராளுமன்றில் அராஜகத்தில் முன்னின்று செயற்பட்டனர் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றில் இன்று ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதியான இருந்த எனக்கு பிரதமர் பதவி ஆசையில்லை என்று கூறும் மஹிந்த ராஜபக்ஷ, பெரும்பான்மை இல்லாத போதும் ஏன் பதவியை தக்கவைத்துக்கொள்ள முயற்சிக்கின்றார்.

உண்மையில் மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் மதிப்பவராக இருந்தால் அவராக பதவியை ராஜினாமா செய்து செல்ல வேண்டும்.

அவ்வாறு செய்திருந்தால் நாட்டு மக்கள் அல்ல உலகமே பாராட்டியிருக்கும்.

ஆனால் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டுள்ளனர்.மனிதப் படுகொலைகளையும், பாரிய கொள்ளைகளையும் செய்த சிலருக்கு எதிராக நீதிமன்றங்களில் வழங்குத்தாக்கல்கள் நிலுவையில் உள்ளன.

அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே மீண்டும் கொலைவெறியுடன் இன்று பாராளுமன்றில் நடந்துகொள்கின்றனர்.

மேற்குல நாடுகளில் எவ்வாறான பாராளுமன்ற முறைமை இருக்கின்றது என்று கூட தெரியாதவர்களே இன்று எமது பாராளுமன்றில் இருக்கின்றனர்.

சிறிதளவும் படிப்பறிவு அற்ற இவர்களுடன் சேர்ந்து அரசியல் செய்யும் நிலைமை எமக்கு ஏற்பட்டுள்ளது.

Copyright © 5641 Mukadu · All rights reserved · designed by Speed IT net