இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு?

இன்றைய நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் ஏற்றுக்கொள்ள சிறிசேன மறுப்பு?

பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையையும் ஏற்றுக்கொள்ள தயாரில்லை என ஜனாதிபதி சிறிசேன தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகின்றன.

உரிய நடைமுறைகள் பின்பற்றப்படாததால் இன்றைய நம்பிக்கையில்லாத தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபயவர்த்தன தெரிவித்துள்ளார்.

பிரதமராக ரணில் விக்கிரமசிங்கவை ஏற்றுக்கொள்ள தயாரில்லை என சிறிசேன தெரிவித்துள்ளார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எங்களை அடுத்த இரண்டுமூன்று நாட்களில் பெரும்பான்மையை நிருபிக்குமாறு ஜனாதிபதி கேட்டுக்கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை சபாநாயகர் கருஜெயசூரிய எழுதிய கடிதத்தினை நிராகரித்து ஜனாதிபதி பதில் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

மேலும் சிறிசேனஐக்கியதேசிய முன்னணியின் பங்காளி கட்சிகளுடனான சந்திப்பையும் இறுதி நேரத்தில் இரத்து செய்துள்ளார்.

இதேவேளைரணிலை பிரதமராக நியமிக்க மாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.. இன்றைய நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தினையும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்..

நேற்று எனக்கு சொன்ன எதனையும் ஐ தே க இன்று பாராளுமன்றத்தில் செய்யவில்லை.

அவர்கள் சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று..அதனால் நான் இன்றைய தீர்மானத்தினை நிராகரிக்கிறேன்.”

இவ்வாறு தற்போது நடந்த ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி கூட்டத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்ரி

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net