இலங்கை மக்களை வெட்கப்படவைக்கும் சம்பவம்!

இலங்கை மக்களை வெட்கப்படவைக்கும் சம்பவம்!

இலங்கையில் தற்போது ஆயுதமாகியுள்ள அரசியல் தொடர்பில் சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினமும் நேற்றும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், இலங்கையின் நாடாளுமன்ற வரலாற்றில் இதற்கு முன்னர் இடம்பெறாதவை என்று அந்த செய்தித்தாள் சட்டத்தரணி ஒருவரை கோடிட்டு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த வாரங்களில் இடம்பெறும் சம்பவங்கள் நாட்டு மக்களை வெட்கப்படவைக்கும் சம்பவங்களாகும்.

எனினும் இதற்கு மத்தியில் நேற்று நாடாளுமன்ற சபாநாயகரும் அவரை சூழ்ந்து மனித சங்கிலியாக வந்த காவல்துறையினரும் சிறப்பான செயலை வெளிக்காட்டினர் என்றும் குறித்த சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் நேற்றும் நேற்று முன்தினமும் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள், பிரதமராக நியமிக்கப்படடுள்ள மஹிந்த ராஜபக்சவின் முன்னிலையிலேயே இடம்பெற்றதாகவும் நியூயோர்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net