நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனாதிபதி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாதென ஜனாதிபதி அறிவிப்பு!

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பை ஏற்றுக்கொள்ள முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (வௌ்ளிக்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதுபற்றி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா மேலும் கூறுகையில்,

“ஜனாதிபதியின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படாததன் காரணமாகவே வாக்கெடுப்பின் பெறுபேறுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து உறுப்பினர்கள் செயற்பட்ட விதம் மிகவும் தவறானது. தான் கூறியதை அவர்கள் புறக்கணித்துவிட்டு முறையாக செயப்படவில்லை என்று ஜனாதிபதி கூறினார்.”

ஜனாதிபதி எதிர்கட்சிகளிடம் நிலையியல் கட்டளை 113 இன் படி செயற்படுமாறு கோரியிருந்தார். எனினும், அந்த விடயம் நேற்றைய அமர்வின் கடைபிடிக்கப்படவில்லை.

நம்பிக்கையில்லா பிரேரணையின் சட்ட விதியின் கூறுகளை அகற்றுமாறு ஜனாதிபதி விடுத்த கோரிக்கை இங்கு புறக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா சுட்டிக்காட்டினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net