ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது!

ரணிலை பிரதமராக நியமிக்க முடியாது!

“ரணிலை பிரதமராக நியமிக்கமாட்டேன் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்“ என ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேனவிற்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) மாலை இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்தச்சந்திப்பின் போதே ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதாக அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

“இன்றைய நம்பிக்கையில்லாப் பிரேரணை தீர்மானத்தினையும் நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன்.

நேற்று எனக்குச் சொன்ன எதனையும் ஐக்கிய தேசிய கட்சி இன்று நாடாளுமன்றத்தில் செய்யவில்லை.

அவர்கள் சொன்னது ஒன்று செய்தது இன்னொன்று. அதனால் நான் இன்றைய தீர்மானத்தினை நிராகரிக்கிறேன்.” இவ்வாறு ஜனாதிபதி குறிப்பிட்டதாக அமைச்சர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net