வாகன விபத்தில் லொறி சாரதி பலி ; 25 பயணிகள் படுகாயம்!
வரக்காப்பொல பகுதியில் ஏற்பட்ட வாகன விபத்தில் லொறி சாரதி உயிரிழந்த நிலையில் மேலும் 25 பயணிகள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரக்கப்பொல பகுதியில் சற்றுமுன் லொறி ஒன்றும் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்தில் லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிழந்ததோடு குறித்த பஸ்ஸில் பயணித்த 25 பயணிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வரக்கப்பொல பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.