30 அமைச்சுகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது!
பாதுகாப்பு அமைச்சு தவிர்ந்த, 30 அமைச்சுகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட அதிரடி படையின் பிரதி பொலிஸ்மா அதிபர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் நிலைமையை கருத்திற் கொண்டு கடந்த வியாழக்கிழமை முதல் குறித்த அமைச்சுகளுக்கு இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் அரசியல் குழப்ப நிலை வழமைக்கு திரும்பும் வரை இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், தேவை ஏற்படின் அமைச்சர்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்படும் என பொலிஸ் விசேட அதிரடி படையின் பிரதி பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.