அமெரிக்கா கூட்டு வான் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 43 பேர் பலி!

அமெரிக்கா கூட்டு வான் தாக்குதல் – குழந்தைகள் உட்பட 43 பேர் பலி!

சிரியாவில் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி வான் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் ஐ.எஸ்.உறுப்பினர்களின் குடும்பங்கள் என 17 குழந்தைகள் உட்பட 36 பேர் உயிரிழந்தனர். அதனைவிட 7 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் அரசுக்கு எதிராக உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். ஐ.எஸ். குழுவினரும் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.

இவர்களை கட்டுக்குள் கொண்டுவர .ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிரியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படை மற்றும் ரஷ்ய ஆதரவு பெற்ற அரசு படைகள் ஆகியவையும் போரில் இறங்கியுள்ளன.

சிரியாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உட்பட இலட்சக்கணக்கான பொதுமக்கள் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், ஈராக் எல்லை அருகே டெயிர் எஸ்ஸார் மாகாணத்தில் அபு ஹசன் கிராமத்தில் ஐ.எஸ். அமைப்பினரின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் என தகவல் கிடைத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா தலைமையிலான கூட்டணி படையினர் இங்கு வான்வழித் தாக்குதலை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net