ஆப்கான் – தலிபான் மோதல்! – 69 பேர் உயிரிழப்பு!

ஆப்கான் – தலிபான் மோதல்! – 69 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலிபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் கடந்த 24 மணி நேரமாக ராணுவம் நடத்திய தாக்குதல்களில் 69 பேர் கொல்லப்பட்டனர்.

நேற்று காலையில் இருந்து இன்று காலைவரை கடந்த 24 மணி நேரமாக லக்மன், நன்கர்ஹர், பக்டிக்கா, காஸ்னி, மைடான் வர்டக், கந்தஹார், உருஸ்கான், ஃபரா, கோர், டக்ஹர், ஃபர்யாப், ஹேம்லன்ட், நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில் இராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதன்போதே 69 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அத்துடன் 20 பயங்கரவாதிகள் காயங்களுடன் பிடிபட்டதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் அப்பகுதிகளில் இருந்த தலிபான்களின் ஆயுதக் கிடங்குகள் மற்றும் பதுங்கு குழிகள் இத்தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆப்கானிஸ்தானில் சுமார் 45 சதவீதம் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் தலிபான் பயங்கரவாதிகள் ஏராளமான பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர். அவர்களை வேட்டையாடும் நோக்கில் இராணுவமும், விமானப் படையும் தாக்குதல் நடத்தி வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net