ஐக்கிய தேசிய கட்சி மூன்று குழுக்களாக பிரிந்துள்ளது!
ஐக்கிய தேசிய கட்சி தற்போது மூன்று குழுக்களாக பிரிந்துள்ளது என ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது.
பிரதமர் அலுவலகத்தில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே பிரதி அமைச்சர் ஆனந்த அளுத்கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“இதனால் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒருபோதும் முன்னோக்கி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாஸ பொறுப்பெற்றுக் கொண்டால் அவருடன் இணைந்து பயணிக்க தாங்கள் தயாராகவுள்ளதாக கட்சியின் சில முக்கியஸ்தர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தற்போதுள்ள சூழ்நிலையில் அவரால் கட்சியின் பொறுப்பை ஏற்று முன்னோக்கி செல்லமுடியாது“ என தெரிவித்துள்ளார்.