சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமரை நீக்கவேண்டும்!

சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமரை நீக்கவேண்டும்!

அரசியலமைப்பிற்கு முரணாக சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமருக்கு எதிராக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார்.

நாரஹேன்பிட்டவில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“மஹிந்தவின் அரசாங்கம் செல்லுபடியற்றதாகும். சட்டரீதியற்ற முறையில் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 122 வாக்குகளால் இரு தடவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அத்துடன் நாட்டின் ஆட்சியின் உயர்பீடமான நாடாளுமன்றத்தில் அநாகரிகமான தாக்குதல்களை மேற்கொண்டதுடன், இலங்கையின் ஜனநாயகத்தினையும் அவமானப்படுத்தியுள்ளனர்.

அராஜகவாதிகள் போல் செயற்பட்டு நாடாளுமன்றத்தின் சொத்துக்களை சேதப்படுத்தியும், சபாநாயகர் மற்றும் அவரது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும் என்பதுடன், அவர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net