சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

சமகால சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவரும் முயற்சியில் ஆளும் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தை தொடர்ந்தும் நிலையற்ற தன்மைக்கு உள்ளாக்குவது மற்றும் போலி ஆவணங்கள் தயாரித்து வெளியிடப்பட்டமை ஆகிய விடயங்களை அடிப்படையாக கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சபாநாயகரினால் தங்களிடம் சமர்ப்பிக்காத நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியமை உட்பட மேலும் பல விடயங்கள் காரணமாக கருஜயசூரிய அந்த பதவியில் செயற்படுவது ஜனநாயகத்திற்கு ஆபத்து என ஆளும் கட்சியினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆளும் கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © 5758 Mukadu · All rights reserved · designed by Speed IT net