சுற்றுச்சூழல் ஆர்ப்பாட்டக்காரர்களால் லண்டன் பாலங்களில் நெரிசல் – 70 பேர் கைது!

சுற்றுச்சூழல் ஆர்ப்பாட்டக்காரர்களால் லண்டன் பாலங்களில் நெரிசல் – 70 பேர் கைது!

மத்திய லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் தேம்ஸ் நதிக்கு குறுக்காக உள்ள 5 பாலங்களிலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய (சனிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறாக செயற்பட்ட 70 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் வெஸ்ட்மின்ஸ்டருக்கு அருகில் பெரும் பதாதைகளை ஏந்திய வண்ணம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“Stop Climate Breakdown”, “Fossil Fuel Era Over” மற்றும் “Rebel For Life” போன்ற வாசகங்களுடன் பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

குற்றச்சாட்டுகள் பற்றிய உடனடி தகவல்கள் அல்லது எதிர்ப்பாளர்களின் மொத்த எண்ணிக்கை ஆகிய தகவல்கள் வௌிப்படுத்தப்படவில்லை.

“அழிவு எதிரெழுச்சி கலகம்” அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் இதுபற்றி கூறுகையில்,

மெதுவான காலநிலை மாற்றம் தொடர்பாக மாற்று நடவடிக்கைகளை எடுப்பதற்கு பிரித்தானிய அரசாங்கத்திற்கு அழுத்தல் கொடுத்தல் மற்றும் 2025 ஆம் ஆண்டில் பச்சை வீட்டு வாயு உமிழ்வை நீக்குதல் என்பவற்றை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

Copyright © 8691 Mukadu · All rights reserved · designed by Speed IT net