ஒரு தரப்பினரால் எதனையும் தீர்மானிக்க முடியாது!
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகளில் ஒரு தரப்பினர் மாத்திரம் எதனையும் தீர்மானிக்க முடியாதென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மஹிந்த இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் நாடாளுமன்றத்திற்கென காணப்படுகின்ற தனித்துவமான சம்பிரதாயங்களை மீறி எவரும் செயற்பட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தவகையில் நிலையியல் கட்டளையின் பிரகாரமே நாடாளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
ஆனால் ஒரு தரப்பினர், நிலையியல் கட்டளையினை மீறி செயற்படுவதற்கே அதிகம் முற்படுகின்றனர். அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் மஹிந்த தெரிவித்துள்ளார்.
ஆகையால் நாடாளுமன்ற சம்பிரதாயங்கள் மற்றும் நிலையியல் கட்டளை ஆகியவற்றின் அடிப்படையில் தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை முன்வைப்பது சிறந்ததெனவும் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.