ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்த தேரர்கள் மீது தாக்குதல்!
பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
குறித்த போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் இன்று காலை முன்னெடுக்கப்பட்டு இருந்தது.
இதில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி பௌத்த தேரர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தனர்.
இலங்கை தேசியக் கொடியில் பெரும்பான்மையை பிரதிபளிக்கும் கொடியை மாத்திரம் ஏந்தி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இவர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.