நாடாளுமன்றத்தை கூட்டியது சட்டவிரோதமானது – உயர் நீதிமன்றில் மனு!
இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டுவது சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலிற்கு பின்னர் உயர் நீதிமன்றம் அதற்கான இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றத்தை கூட்டுவது சட்டவிரோதமானது என அட்மிரல் சரத் வீரசேகர இன்று (திங்கட்கிழமை) உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார்.