நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது!

01.08 PM : நவம்பர் 23 ம் திகதி காலை 10.30 மணிவரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

12.37 PM : இன்றைய நாடாளுமன்ற அமர்வில் பங்கேற்க தயாராகவுள்ளதாக, ஆளும் கட்சி தெரிவித்துள்ளது.

12.23 PM : நாடாளுமன்ற செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இணக்கம்.

12.20 PM : சபாநாயகர் கருஜசூரிய தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெற்று வருகின்றது.

12.15 PM :அரசாங்க தரப்பினரை பிரதிநிதித்துவப்படுத்தும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான கலந்துரையாடல், நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில், சற்று நேரத்துக்கு முன்னர் ஆரம்பமாகியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில், இந்த கலந்துரையாடல் இடம்பெற்று வருகின்றது.

12.00 PM : ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற குழு கூட்டம் தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்று வருகின்றது.

11.08 AM :நாடாளுமன்ற வளாகத்தில், மேலதிக பொலிஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net