பிரதமர் மஹிந்த தலைமையில் இன்று விசேட கூட்டம்!
இன்று நடைபெறவுள்ள நாடாளுமன்ற அமர்வில் முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடுகள் தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி இன்று (திங்கட்கிழமை) காலை கூட்டமொன்றை நடத்தி தீர்மானிக்கவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று நடைபெற்ற சர்வகட்சி கூட்டத்தில் எந்ததொரு சிறந்த தீர்வும் எட்டப்படாத காரணத்தால் அவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கூட்டம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இக்கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளும் பங்கேற்கவுள்ளன.
இதேவேளை பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1 மணிக்கு மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.