மஹிந்தவிற்காக குண்டு துளைக்காத கார்கள்?
பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்காக குண்டு துளைக்காத கார்களை கொள்வனவு செய்யும் திட்டம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ஊடகப் பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்காக இரண்டு குண்டு துளைக்காத கார்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
இதுவரையில் பிரதமருக்காக புதிய வாகனங்கள் எதுவும் கொள்வனவு செய்யப்படவில்லை என பிரதமர் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.