மாவீரர் பெற்றோர் கெளரவிப்பு நிகழ்வு லண்டன் 2018
தாயக விடுதலை போரில் உயிர்நீத்த மாவீரர்களின் பெற்றோர்களை கெளரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம்(18.11.2017) நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ஒக்ஸ்போர்ட் நகரில் அமைந்துள்ள உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் காலை 11.00 முதல் தமிழீழ தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய நிகழ்வானது மாலை 5.00 வரை நடைபெற்றது.
இந்நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாவீரர்களின் உறவுகள் மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் எதிர்வரும் மாவீரர் நாளினை சிறப்புற நடாத்த வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.