வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது !

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் பெண் உட்பட இருவர் கைது !

டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்திருந்த பெண்ணொருவர் உட்பட இரண்டு நபர்கள் 2.7 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சித்த சந்தேகத்தின் பேரில் சுங்க போதைத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தின் போது மதுரங்குளியைச் சேர்ந்த 49 வயதுடைய பெண்ணொருவரும் நாத்தாண்டியைச் சேர்ந்த 32 வயதுடைய ஆணொருவருமே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

மதுரங்குளியவைச் சேர்ந்த பெண் தனது பயணப்பொதியில் 9 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான 19920 வெளிநாட்டு சிகரெட்டுகளை மறைத்து சட்டவிரோதமான முறையில் கடத்த முயற்சிக்கையிலேயே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.

அதேபோல் நாத்தாண்டியைச் சேர்ந்தவர், 1,740,000 ரூபா பெறுமதிவாய்ந்த 34,800 வெளிநாட்டு சிகரெட்டுகளை தனது பயணப்பொதியில் மறைத்து வைத்தே நாட்டுக்குள் கடத்த முயற்சித்துள்ளார்.

இவர்கள் இருவரின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையினால் சுங்க போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த இருவரும் தடுத்து பரிசோதனைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், இருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளை சுங்க பிரிவு பறிமுதல் செய்து மேலதிக விசாரணைகளும் மேற்கொண்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net