வெளிநாட்டு தூதுவர்களை நேற்றிரவு சந்தித்தார் ரணில்!
நாட்டின் அரசியல் நெருக்கடி நிலைமை தொடர்பில் ஐக்கிய தேசிய முன்னணி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை வெளிநாட்டு தூதுவர்கள் நேற்றிரவு சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அலரி மாளிகையில் நடைபெற்ற இச்சந்திப்பில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தூதுவர்களுடனான சந்திப்பில் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இந்த சந்திப்பை அடுத்து அலரி மாளிகையில் தூதுவர்களுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஜனாதிபதியின் நிலைப்பாடு தொடர்பிலும் தமது கட்சியின் நிலைப்பாடு குறித்தும் ரணில் விக்கிரமசிங்க தூதுவர்களுக்கு விளக்கி கூறியுள்ளார்.