லசந்த – தாஜூடீன் கொலைகள் குறித்து விசாரணை செய்த சிஐடி அதிகாரி இடமாற்றம்!

லசந்த – தாஜூடீன் கொலைகள் குறித்து விசாரணை செய்த சிஐடி அதிகாரி இடமாற்றம்!

மகிந்த ராஜபக்சவின் முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற முக்கிய சம்பவங்கள் குறித்து தீவிரவிசாரணைகளை மேற்கொண்டிருந்த இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் நிசாந்த சில்வா இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தி கொலை செய்யப்பட்டமை, லசந்த விக்கிரமதுங்க வாசிம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு மிகத்திறமையாக செயற்பட்டு கொண்டிருந்த நிசாந்த சில்வா கடந்த மாதம் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து உடனடியாக இடமாற்றப்பட்டுள்ளார்.

புங்குடுதீவில் மாணவி படுகொலை தொடர்பில் நிசாந்த சில்வா முக்கிய ஆதாரங்களை சேகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முப்படைகளின் பிரதானி ரவீந்திர குணவர்த்தன மற்றும் நேவி சம்பத்திற்கு எதிரான முக்கிய ஆதாரங்களை திரட்டுவதிலும் நிசாந்த சில்வா முக்கிய பங்களிப்பு செய்திருந்தார்.

Copyright © 6770 Mukadu · All rights reserved · designed by Speed IT net