இலங்கையின் செழிப்பு சுட்டெண் உயர்வடைந்துள்ளது!

இலங்கையின் செழிப்பு சுட்டெண் உயர்வடைந்துள்ளது!

இலங்கையின் செழிப்பு சுட்டெண் 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017ஆம் ஆண்டில் உயர்ந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 2016 இல் 0.661 என்று இருந்த செழிப்பு சுட்டெண் 2017ஆம் ஆண்டு 0.771 என்ற அளவில் உயர்ந்துள்ளதாக கணிப்பிடப்பட்டுள்ளது.

பொருளாதாரம், வர்த்தகம், மற்றும் சமூக அடித்தள முன்னேற்றங்களின் அடிப்படையிலேயே குறித்த சுட்டெண் கணிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு மற்றும் அடித்தள கட்டமைப்புக்கள், பாதையமைப்புக்கள் மற்றும் மின்சார வசதிகள் என்பன இந்த உயர்வுப் போக்குக்கு காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net