இலங்கையில் பொலிஸார் மீது மீண்டும் மிளகாய் தூள் தாக்குதல்!

இலங்கையில் பொலிஸார் மீது மீண்டும் மிளகாய் தூள் தாக்குதல்!

தம்புள்ளை – இனாமலுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இனாமலுவ பிரதேசத்தில் விற்பனை நிலையமொன்றில் நடத்திச் செல்லப்பட்ட போதைப்பொருள் வர்த்தகத்தை நேற்று சுற்றிவளைக்கும் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்த நபர்கள் மிளகாய் தூள் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இதில் 5 அதிகாரிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிளகாய் தூள் தாக்குதலுக்கு உள்ளான குறித்த 5 அதிகாரிகளும் தற்போது தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் தற்போது மோசமான ஆயுதங்களில் மிளகாய் தூளும் ஒன்றாக மாறிவிட்டது.

அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வுகளின் போதும், உறுப்பினர்களுக்கு இடையில் மிளகாய் தூள் தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், பாதுகாப்பிற்காக வந்த பொலிஸ் அதிகாரிகள் மீதும் மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் தம்புள்ளையில் மீண்டும் பொலிஸ் அதிகாரிகள் மீது மிளகாய் தூள் தாக்குத் மேற்கொள்ளப்பட சம்பவம் அனைவர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net