டுவிட்டரில் எடிட் வசதி விரைவில் அறிமுகம்!
டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுவிட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படவுள்ளது.
அதிகம் எதிர்பார்க்கப்படும் பலருக்கு, அதிகம் தேவைப்படும் அம்சமாக டுவிட்களை எடிட் செய்யும் வசதி இருக்கின்றது. டுவிட்டரில் நீண்ட காலம் எதிர்பார்க்கப்படும் இந்த அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கின்றது.
டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சே டுவிட்டரில் எடிட் பட்டன் வழங்குவது குறித்த தகவலை சமீபத்தில் வழங்கி இருக்கின்றார்.
டெல்லி ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற விழாவில் கூறிய ஜேக் டோர்சே, “டுவிட்களை எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலினை செய்யப்படுவதாக தெரிவித்தார்.
டுவிட்களை எடிட் செய்யும் அம்சத்தை பலரும் வீணடிக்கப்படக்கூடாது என்ற காரணத்திற்காக டுவிட்களை எடிட் செய்யும் வசதி கட்டுப்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள், டுவிட்டர் சேவையில் பிரச்சினையாக பார்ப்பதை தவிர்த்து விட்டு அதை சரி செய்யும் முயற்சிகளை நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது என டோர்சே தெரிவித்தார்.
டுவிட்டரில் எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரிசீலனை செய்து, அதை சரியாக வழங்க தொடர்ந்து முயற்சித்து வருகின்றது.
நாங்கள் உருவாக்கி வரும் அம்சம் பொது வெளியிலிருந்து எதையும் நேரடியாக எடுத்துவிடவோ அல்லது திசைத்திருப்பும் வகையிலோ இருக்காது என அவர் மேலும் கூறினார்
டுவிட்களுக்கு எடிட் பட்டன் வழங்குவது பற்றி அதிகம் சிந்திக்கப்படுகின்றது என 2016இல் டோர்சே தெரிவித்திருந்தார். எனினும் இதுபற்றி எவ்வித முடிவும் இதுவரை உறுதியாகவில்லை.
டுவிட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எடிட் வசதி பற்றிய விபரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கும் நிலையில், இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.