ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் சபாநாயகர் பதவி விலக வேண்டும்!

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் சபாநாயகர் பதவி விலக வேண்டும்!

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், சபாநாயகர் கரு ஜயசூரிய பதவி விலகவேண்டும் என சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மருதானையில் உள்ள சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்​கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு கருத்துத் தெரிவித்த அவர், சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களையும் பாதுகாக்காமல் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை மாத்திரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கின்றார்.

சபாநாயகரின் இந்த செயற்பாடு நடுநிலைமை இல்லையென வீரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில், சபாநாயகர் கரு ஜயசூரிய பதவி விலகவேண்டும். சபாநாயகர் பதவிக்காக தகுந்த ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என வீரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net