மைத்திரியிடம் கோரிக்கை விடுக்கும் பிரித்தானிய அரசியல் பிரபலம்!
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு புதிய பிரதமராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்தமை தொடர்பில் தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக பிரித்தானிய தொழிற்கட்சியின் நிழல் வெளியுறவு அமைச்சர் லிஸ் மெக்னென்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கைகளை அரசியலமைப்பை மீறும் மற்றும் நாட்டை அச்சுறுத்துகின்ற செயலாக பார்க்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில்,
தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்ச 2009ஆம் ஆண்டு முடிவடைந்த உள்நாட்டுப் போரின் போது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை மீளமைக்க வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன். சட்டத்திற்கு உட்பட்ட ரீதியில் வேறு ஒருவரை பிரதமராக நியமிக்குமாறு கோருகின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.