சுவிட்ஸர்லாந்து மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண்!

சுவிட்ஸர்லாந்து மாநகரசபை தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ் பெண்!

சுவிட்ஸர்லாந்தின் பேர்ண் மாநில பிரதான எதிர்க்கட்சியான எஸ்.பி கட்சியின் சார்பில் தூண் மாநகரசபை தேர்தலில் தர்ஷிகா கிருஸ்ணானந்தம் என்ற ஈழத் தமிழ் பெண் போட்டியிடுகின்றார்.

தர்ஷிகா கிருஸ்ணானந்தம் தமிழ்ச் சமூகத்தின் வழிகாட்டியாகவும் புலம்பெயர் தமிழர்களை ஒன்றிணைக்கும் பாலமாகவும் செயற்பட்டு வருகின்றார்.

இதேவேளை, இவர் பிரதேச தமிழ் மக்களின் மதம் மற்றும் இந்துமதம், கலாச்சாரம் தொடர்பான ஆலோசகர் பட்டியலில் ஓர் ஆலோசகராக தூண் மாநகரசபையில் இணைக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Copyright © 4730 Mukadu · All rights reserved · designed by Speed IT net