‘கஜா’ புயல் பாதிப்புக்களை பார்வையிட மத்திய குழு விஜயம்!

‘கஜா’ புயல் பாதிப்புக்களை பார்வையிட மத்திய குழு விஜயம்!

தமிழகத்தில் உருவான ‘கஜா’ புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட மத்திய குழுவினர் நாளை (வெள்ளிக்கிழமை) தமிழ்நாட்டுக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

அந்த வகையில் மத்திய பேரிடர் மேலாண்மை இயக்குநர் தலைமையில் 4 பேர் கொண்ட குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வை மேற்கொள்ளவுள்ளது.

தமிழகத்தில் கடந்த வாரம் ‘கஜா’ புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. தந்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறன.

இதற்கிடையே, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று இன்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.

புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார். அவருக்கு பதிலளித்த பிரதமரும் மத்திய ஆய்வு குழுவை அனுப்புவதாக உறுதியளித்திருந்தார். இதனையடுத்தே மத்திய குழு தமிழகத்துக்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net