கூட்டமைப்பு, ஜே.வி.பியின் ஆதரவு தேவையில்லை!

கூட்டமைப்பு, ஜே.வி.பியின் ஆதரவு தேவையில்லை!

நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பானமையுள்ளது. இந்நிலையில் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆதரவளிப்பதையெல்லாம் இதற்கு அப்பாற்பட்ட விடயம் என மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு மேலும் தெரிவித்த அவர்,

“நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு 101 உறுப்பினர்கள் மட்டும் தான் இருக்கிறார்கள். எமக்கு 103 உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிப்பதையெல்லாம் அப்பாற்பட்ட விடயமாகும்.

அவர்களுக்கு எமக்கு எதிராக பிரேரணையொன்றை நிறைவேற்றிக்கொள்ளத்தான் 122 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கின்றதே ஒழிய, ஸ்தீரமான கூட்டணியொன்றை அமைக்க அல்ல. அத்தோடு அவர்கள் கூட்டணிக் கட்சியல்ல.

ஆனால், நாம் தனியானக் கூட்டணி எனும் வகையில் ஐக்கிய தேசியை விட பலமான நிலையிலேயே இருக்கிறோம்.

இதன் காரணத்தினால் தான் நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு நாம் 7 உறுப்பினர்களின் பெயரைப் பரிந்துரைத்துள்ளோம்.” என கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net