நாட்டின் பகுதிகளில் இன்று அடைமழை!

நாட்டின் பகுதிகளில் இன்று அடைமழை!

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று அடைமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காலை நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்தின் சில பகுதிகளில் காலை நேரத்தில் பனி மூட்டமான காலநிலை நிலவும் என குறிப்பிடப்படுகின்றது.

இடியுடன் மழை பெய்யும் பிரதேசங்களில் தற்காலிகமாக காற்று வீசக்கூடும் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை மின்னலினால் ஏற்படுகின்ற ஆபத்துக்களை குறைத்து கொள்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொது மக்களிடம் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டு கொண்டுள்ளது.

பொத்துவிலில் இருந்து திருக்கோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையிலான கடற்கரை பிரதேசங்களில் இடைக்கிடையே மழை பெய்யும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் மற்றும் திருகோணமலை ஊடாக கடற்பகுதியில் 30 – 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் 70 – 80 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், அந்த கடல் பிரதேசங்களில் தற்காலிகமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என திணைக்களத்தினால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net