“பிரதமர் என எண்ணி கருத்துக்களை வெளியிடுகிறார் ரணில்”

“பிரதமர் என எண்ணி கருத்துக்களை வெளியிடுகிறார் ரணில்”

2020 ஆம் ஆண்டில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனக் குறிப்பிடுவதற்கு ரணில் விக்ரமசிங்கவுக்கு எவ்வித அரசியல் அதிகாரமும் தற்போது இல்லை எனத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, ரணில் விக்ரமசிங்க தான் தான் இன்னும் பிரதமர் என்ற நினைவில் கருத்துக்களை வெளியிடுகின்றார் எனவும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமரும் வெகுவிரைவில் மாகாண சபை தேர்தலை நடத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இன்று 06 மாகாண சபைகள் பதவி காலம் இழந்து மக்கள் பிரதிநிதிகள் இன்றி செயற்படுகின்றது.

இதற்கு ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளே பொறுப்பு கூற வேண்டும்.

இந்த மூன்று தரப்பினரும் அடுத்த முறை அரசியலுக்குள் பிரவேசிப்பது சந்தேகத்திற்குரிய விடயம்.

ஆகவே அடுத்த வருடம் முதற்காலாண்டில் மாகாண சபை தேர்தல்கள் நடத்துவதே கட்டாயமானதாகும் எனவும் தெரிவித்தார்.

Copyright © 9467 Mukadu · All rights reserved · designed by Speed IT net