மஹிந்த, ரணில் உள்ளிட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிறையில் அடைக்க வேண்டும்!

மஹிந்த, ரணில் உள்ளிட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிறையில் அடைக்க வேண்டும்!

மகிந்த, ரணில் உள்ளிட்ட 225 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சிறையில் அடைக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இடம்பெற்ற சம்பவங்களை நோக்கினால் சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களையும் சிறையில் அடைக்க வேண்டும்.

சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைது செய்ய முடியும்.

நிலையியற் கட்டளைகளின் அடிப்படையில் நாடாளுமன்ற பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதேவேளை, நிறைவேற்று அதிகாரம், நாடாளுமன்றம் மற்றும் நீதிமன்றம் ஆகியன வழங்கி வரும் பொருத்தமற்ற தீர்ப்புக்களினால் மக்கள் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

இந்தப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வு காண்பதற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.

Copyright © 3337 Mukadu · All rights reserved · designed by Speed IT net